வருணின் சுழலில் வீழ்ந்த தென் ஆப்பிரிக்கா; டி20 தொடரை 3-1 என கைப்பற்றி இந்தியா அசத்தல்..!
Indias stunning victory clinches the T20 series against South Africa
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 05 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 05-வது மற்றும் கடைசி போட்டி இன்று குஜராத் அகமதாபாத்தி நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில்களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் சார்பாக முதலில் களமிறங்கிய அணியின் சஞ்சு சாம்சன் 37 ரன்னும், அபிஷேக் சர்மா ரன்னும் எடுத்தனர். அதிகபட்சமாக திலக் வர்மா 42 பந்தில் 73 ரன்கள் அடித்தார். ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி, 25 பந்தில் 63 ரன்களும் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி சார்பாக சர்வதேச டி 20 போட்டியில் அதிவேக அரைசதம் கடந்த வீரர் என்ற சாதனை அடைந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் கார்பின் போஷ் 02 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இதில், டி காக் அதிரடியாக ஆடி, 35 பந்தில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டெவால்டு பிரேவிஸ் 17 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 08 விக்கெட்டுக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதனபடி. டி20 தொடரை 3-1 என கைப்பற்றி அசத்தியுள்ளது. போட்டோயின் ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வுசெய்யப்பட்டார்.
இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 04 விக்கெட்டும், பும்ரா 02 விக்கெட்டும், பாண்டியா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
English Summary
Indias stunning victory clinches the T20 series against South Africa