ஆசிட் வீச்சில் கைது.. 17 ஆண்டுகளுக்கு பின் பாதிக்கப்பட்ட பெண்ணை தேடி தொடர் பாலியல் வன்கொடுமை.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்..!
Man arrested for sexually abusing woman
ஆசிட் வீசிய பெண்ணை தேடிச்சென்று தொடர் பாலியல் வன்கொடுமை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆஷிஷ். இவர் கடந்த 2005ஆம் ஆண்டு பெண் ஒருவர் மீது ஆசிட் வீசியதால் 17 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். விடுதலையான அவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் இருப்பிடத்தை தெரிந்தவர்கள் மூலம் அறிந்து கொண்டார். அதன்பின் 2021 டிசம்பரில் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை மிரட்டி உள்ளார்.
மேலும், அவரது கணவர் மற்றும் குழந்தைகள் மீது ஆசிட் வீசி விடுவேன் எனவ மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் அதனை படம் பிடித்து வைத்துக் கொண்டார் அந்த வீடியோவை காட்டி சமூக வலை தளங்களில் பதிவேற்றி விடுவதாகவும் மிரட்டி பலமுறை தொடர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரை கொடுமைகள் பொறுக்க முடியாத அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆஷிஷை தேடிவந்தனர். இதற்காக தனிப்படை அமைத்து தேடி அவர் எங்கும் கிடைக்கவில்லை. அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததால் அவரை தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் கண்காணிப்பு கேமரா உதவியுடன் அவர் பெங்களூருவில் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Man arrested for sexually abusing woman