இந்தியாவிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் மாலத்தீவு முன்னாள் அமைச்சர் மரியம் ஷியுனா! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணத்தை தொடர்ந்து, வாழ்வாதாரம் போன விரக்தியில் பிரதமரையும், இந்திய மக்களையும் கடுமையான விமசர்னங்கள் செய்து சர்ச்சையில் சிக்கியவர் மாலதீவின் முன்னாள் அமைச்சர் மரியம் ஷியுனா.

விரைவில் மாலத்தீவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சியை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் மரியம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

அதில் ஒரு பதிவு இந்திய மக்களை விதிக்க வைத்துள்ளது. "மிகப்பெரும் பின்னடைவை எதிர்கொண்டிருக்கும் எதிர்க்கட்சியிடம் மாலத்தீவு மக்கள் விழ விரும்பவில்லை" என்ற பதிவில் இந்திய தேசியக் கொடியில் இடம்பெற்றிருக்கும் அசோக சக்கரத்தை அவமதிக்கும் வகையில் ஒரு புகைப்படத்தையும் மரியம் வெளியிட்டிருந்தார்.

இதற்க்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், தனது பதிவுக்காக இந்திய மக்களிடம் மரியம் மன்னிப்பு கேட்டுள்ளார். 

இதுதொடர்பாக மரியம் வெளியிட்ட செய்தியில், "மாலத்தீவு எதிர்க்கட்சியான எம்டிபி-க்கு நான் அளித்த பதிலில் பயன்படுத்தப்பட்ட படம் இந்தியக் கொடியை ஒத்திருந்தது.

இது ஏதேனும் தவறான புரிதலை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது முற்றிலும் தற்செயலானது. திட்டமிட்ட நோக்கம் எதுவுமில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maldives Ex Minister Mariyam Shiuna Apology India Flag


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->