மராட்டியத்தில் விநாயகர் சிலை கரைப்பில் 19 பக்தர்கள் பலி..! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் 31-ந் தேதி மராட்டிய மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஆனந்த சதுர்த்தி எனப்படும் சிலை கரைப்பு தினத்துடன் பத்து நாள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் முடிவுக்கு வந்தது. 

நேற்று முன்தினம் மும்பை உள்பட மாநிலம் முழுவதும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. கொரோனா கட்டுப்பாடுகளால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடந்த விநாயகர் சிலை ஊர்வலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் விநாயகர் சிலை கரைப்பின் போது 19 பக்தர்கள் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் 14 பேர் நீர்நிலைகளில் மூழ்கி இறந்தது  தெரியவந்துள்ளது. இதேபோல பன்வெல், வாத்கார் கோலிவாடாவில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் சிலை கரைக்க சென்ற 11 பேர் மின்சாரம் தாக்கி காயமடைந்தனர். 

இதில் 9 மாத பெண் குழந்தையும் அடங்கும். இதுமட்டுமல்லாமல், மாநிலத்தில் சிலை கரைப்பின் போது ஒரு சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்பட்டன. இதேபோன்று புனே நகர், ஊரகப்பகுதி, சந்திராப்பூர் ஆகிய இடங்களிலும் இரு தரப்பினர் இடையே சிறு, சிறு மோதல்கள் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

maharstra vinayagar statue meltdown


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->