இனி இவர்களின் பட்டியல் இன சான்றிதழ் பறிக்கப்படும் - மகாராஷ்டிர முதல்வர் அதிரடி! - Seithipunal
Seithipunal


இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் ஆகியோர் தவிர பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியல் சாதி (SC) சான்றிதழ் பெற்றிருந்தால், அவை செல்லாது என மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

அத்தகைய சான்றிதழ்களின் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு அல்லது பிற நலத்திட்டப் பலன்கள் பெற்றிருந்தால், அவை செல்லாது என அறிவிக்கப்படும். அதோடு, ஏற்கனவே பெற்றுள்ள பொருளாதார நலன்கள் மீட்டெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

பட்டியல் சாதிக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு மற்றும் பலன்கள், இந்து, பௌத்த மற்றும் சீக்கிய மதங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என உச்சநீதிமன்றம் 2024ஆம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பை பட்னாவிஸ் மேற்கோளாக குறிப்பிடினார்.

மேலும், கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க நவீன சட்டங்கள் தேவைப்படுகின்றன என தெரிவித்த அவர், “விரைவில் மதமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை மாநில சட்டமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவுள்ளோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

மாநில அரசின் இந்த முடிவுகள் மதமாற்றம் மற்றும் பட்டியல் சாதி சான்றிதழ் முறைகேடுகளை தடுக்க வழிவகுக்கும் சூழல் உருவாகியுள்ளதாக பலரும் கருது தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

maharastra cm announce SC Certificate new rule


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->