உறவுக்கார சிறுமியுடன் காதல் உரையாடலில் சிறுவன்.. ஆத்திரமடைந்த சொந்தத்தின் வெறித்தன சம்பவம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் பிவண்டி பகுதியை சார்ந்த 14 வயது சிறுவன், கடந்த 6 மாதமாக 14 வயது சிறுமி ஒருவருடன் பழகி வந்துள்ளான். இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் குடும்பத்தினர், சிறுவனின் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

சிறுவன் சிறுமியுடன் பழகுவதை நிறுத்தாமல் இருந்த நிலையில், சிறுமியின் உறவினரான அஜய் ராம்கிரன் யாதவ் (வயது 20) என்ற வாலிபருக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சிறுவனை கொலை செய்ய திட்டமிட்ட அஜய், அங்குள்ள தாபோடி கிராமத்திற்கு சிறுவனை அழைத்து சென்றுள்ளான். 

அங்கு சிறுவனை கொடூரமாக கொலை செய்து, உடலை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளான். மகனை காணாது தேடியலைந்த சிறுவனின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். 

பின்னர் சிறுவனின் உடலை கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து மீட்டெடுத்த நிலையில், விசாரணைக்கு பின்னர் அஜயை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Thane Murder 14 year child speech with his Love girl friend


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal