மகாராஷ்டிரா யவத்மால் மாவட்டத்தில் இருந்து முதல் முஸ்லிம் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஆட்டோ ஓட்டுநரின் மகள்..!
Maharashtra first Muslim woman IAS officer is an auto driver daughter
மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் உள்ள வறண்ட மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட யவத்மால் மாவட்டம், அதிக விவசாயிகள் தற்கொலை விகிதத்திற்குப் பெயர் பெற்ற ஒரு மாவட்டம்.
இந்த மாவட்டத்தில் இருந்து ஒரு ஆட்டோ ஓட்டுநரின் மகளான அதீப் அனாம் என்பவர் 2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 142-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அதீப் தனது மாநிலத்திலிருந்து மதிப்புமிக்க இந்திய நிர்வாகப் பணியில் சேர்ந்த முதல் முஸ்லிம் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்; "பெண்கள் உயர்கல்வி கற்பதை சமூகம் எதிர்த்தது. அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் .இலக்கில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் என் தந்தை என்னிடம் கூறினார்" என்று அதீப் அனாம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
English Summary
Maharashtra first Muslim woman IAS officer is an auto driver daughter