நாடு எங்க சார் போகுது..? பள்ளி சீருடையில் மது வாங்கிய மாணவிகள்... பெரும் அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
Madhya Pradesh school girl buy in liquor
மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி சீருடை அணிந்த மாணவிகள் அரசு மதுபானக் கடையில் மது வாங்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயது குறைந்தவர்களுக்கு மதுபானம் அல்லது போதைப்பொருள் வழங்கும் விற்பனையாளர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் எனவும் சட்டம் வலியுறுத்தும் நிலையில், மத்திய பிரதேசத்தின் மண்ட்லா மாவட்டம் நைன்பூர் பகுதியில் நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு பள்ளி சீருடையில் வந்த சில மாணவிகள் அரசு மதுபானக் கடையில் எந்தவித அடையாளச் சான்றிதழும் இல்லாமல் மதுபானம் வாங்கினர். கடைக்காரர் இதுகுறித்து எந்தவித கேள்வியுமின்றி விற்பனை செய்தது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, ஆட்சியர் மற்றும் போலீசார் அந்தக் கடையில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆரம்ப விசாரணையில் விற்பனையாளர் மாணவிகளுக்கு மதுபானம் வழங்கியது உறுதியாகியுள்ளது. இது பொது உரிமம் மற்றும் மதுபானச் சட்டத்தின் விதிகளை மீறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அந்த மாணவிகள் தாங்களே மதுபானம் அருந்தினார்களா அல்லது வேறு யாருக்காவது வாங்கிச் சென்றார்களா என்பதையும் விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Madhya Pradesh school girl buy in liquor