நகை திருட்டு வழக்கில் சிக்கிய பெண் டிஎஸ்பி! வைரலாக வீடியோ! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலம் ஜஹாங்கிராபாதில் பணியாற்றி வந்த துணை காவல் ஆய்வாளர் (டிஎஸ்பி) கல்பனா ரகுவன்ஷி (56) மீது திருட்டு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கல்பனாவும், அவரது நீண்டகால தோழி பிரமிளா திவாரியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஆனால், அவர்களிடையேயான இந்த நெருக்கம் தற்போது பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

செப்டம்பர் 24ஆம் தேதி, பிரமிளா வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது, அந்த வாய்ப்பை பயன்படுத்தி கல்பனா அவரது வீட்டுக்குள் நுழைந்து, பணப்பையிலிருந்த ரூ.2 லட்சம் பணத்தையும் மொபைல் போனையும் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சம்பவத்திற்குப் பிறகு சிசிடிவி காட்சிகள் பரிசோதிக்கப்பட்டபோது, கல்பனா கையில் பணப்பை வைத்துச் செல்வது தெளிவாக பதிவாகியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரமிளா, திருடிய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டபோதும், கல்பனா மொபைல் போனை மட்டும் மீட்டளித்தார்.

இதனால், தனது மகளின் பள்ளிக் கட்டணத்துக்காக வைத்திருந்த பணத்தை திருடியதாகக் கூறி, பிரமிளா காவல் நிலையத்தில் கல்பனாவுக்கு எதிராக புகார் அளித்தார்.

சிசிடிவி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, போலீசார் டிஎஸ்பி கல்பனா ரகுவன்ஷி மீது திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்து அவர் தலைமறைவாகிய நிலையில், அவரைக் கைது செய்ய சிறப்பு போலீஸ் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போது, கல்பனா திருடிச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஒரு காவல் அதிகாரி இத்தகைய செயலில் ஈடுபட்டது குறித்து பொதுமக்கள் கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

madhya pradesh theft case DSP 


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->