கணவனை காதலியுடன் சேர்த்து வைத்த பாசக்கார மனைவி.. நெஞ்சை உருக வைக்கும் காதல்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலை சார்ந்த தம்பதி, கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்துள்ளனர். இதில், அதே கணவர் காதல் கொண்ட பெண்ணுடன் மனைவி சேர்த்து வைத்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. 

மேலும், இந்த வினோத வழக்கானது நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், தனது கணவரின் காதலியை சேர்த்து வைக்க ஆசைப்பட்டு விரும்பி விவாகரத்து கோருவதாக மனைவி தனது மனுவில் கூறியுள்ளார். இது குறித்து அவ்வழக்கை வாதாடிய வழக்கறிஞர் பேசுகையில், " குறித்த நபர் தனது மனைவியை பிரிய மனமில்லாமல், அவரது காதலியுடன் சேர்த்து வாழ எண்ணினார். 

இது சட்டப்படி சாத்தியம் இல்லை எனபதால், அவரது மனைவி தனது கணவரின் சூழ்நிலை மற்றும் மனதை புரிந்துகொண்ட, அவரது காதலியுடன் சேர்த்து வைக்க மனதை கல்லாக்கி கணவரை விவாகரத்து செய்து காதலியுடன் திருமணமும் செய்து வைத்துள்ளார் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh girl divorce husband and help to remarriage Husband with his girl


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal