காதலியுடன் அடர்ந்த காட்டிற்குள் ஒதுங்கிய வாலிபர்.. புலி தாக்கியதில் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கட்சிரோலி மாவட்டத்தில் தேசாய்கன்ஞ் பகுதியை சேர்ந்தவர் அஜித் நாகாடே இவருக்கு வயது 21, இவர் கடந்த மே 3ஆம் தேதி அன்று தனது காதலியுடன் இருசக்கர வாகனத்தில் காட்டிற்கு சென்றுள்ளார்.

உசேகாவ் என்ற வனப்பகுதி அருகே சென்றபோது தனது இரு சக்கர வாகனத்தை வழியில் நிறுத்தி விட்டு அதன் பின்னர் இருவரும் அடர்ந்த காட்டுக்குள் சென்றுள்ளனர்.

அப்போது புதர் அருகே பதுங்கியிருந்த புலி ஒன்று, திடீரென அவர் மீது பாய்ந்துள்ளது. இதனைக்கண்ட அவரது காதலி அப்பகுதியில் இருந்து தப்பி ஓடிய அருகே இருந்த கிராமவாசிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் வனத்துறைக்கு தகவல் அளிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் பார்த்த போது அஜித் நாகடே புலி தாக்கியதில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை கண்ட அதிகாரிகள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் புலி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lovers go to forest tiger attack


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->