கேரளா திருச்சூர் மாவட்டம் ஜிம்மில் ‘காதல் வலை’: திருமண வாக்குறுதி கூறி 2 இளம்பெண்களை ஏமாற்றிய பயிற்சியாளர் கைது...!
Love web gym Thrissur district Kerala Trainer arrested deceiving 2 young women by promising marriage
கேரளா மாநிலத்தின் திருச்சூர் மாவட்டம் சேர்பு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அஜ்மல் என்பவர் குர்காஞ்சேரியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.

அங்கு பயிற்சிக்கு வந்த இரு இளம்பெண்களுடன் தனித்தனியாக பழகி, ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவரிடம் நெருக்கம் வளர்த்துள்ளார். இருவரிடமும் காதல் பேசி, திருமணம் செய்வேன் என்ற நம்பிக்கையை உருவாக்கி உணர்ச்சி ரீதியாக அவர்களை ஏமாற்றியுள்ளார்.
அந்த நம்பிக்கையை சாதகமாக பயன்படுத்தி, திருமண வாக்குறுதி தெரிவித்து இருவரிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல நாட்கள் கழித்து தான் இருவரும் உண்மையை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து சேர்பு காவல் நிலையத்தில் புகார் அளித்து, திருமண ஆசை காட்டி தங்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தனர்.மேலும், புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிந்து அஜ்மலை கைது செய்தனர்.
மேலும் விசாரணையில், உடற்பயிற்சி கூடத்திற்கு வந்த மற்ற பெண்களிடமும் இதேபோன்ற முறையில் தவறாக நடந்து கொண்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.
இருப்பினும், தற்போது இரண்டு இளம்பெண்களின் புகாரின் அடிப்படையிலேயே வழக்கு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
English Summary
Love web gym Thrissur district Kerala Trainer arrested deceiving 2 young women by promising marriage