காதல் விவகாரம்..பெண் விண்வெளி என்ஜினீயர் தற்கொலை: விசாரணையில் வெளிவந்த உண்மை! - Seithipunal
Seithipunal


கல்லூரியில் 4-வது மாடியில் இருந்து குதித்து பெண் விண்வெளி என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தர்மஸ்தலா அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம்  போலியார் பகுதியை சேர்ந்தவர் இளம் பெண்  அகன்ஷா.22 வயதான  இவர் பஞ்சாப் மாநிலத்தில்  உள்ள எல்.பி.யூ. பல்கலைக்கழகத்தில் ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயரிங் படிப்பை முடித்து கடந்த 6 மாதங்களாக டெல்லியில் விண்வெளி என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஜெர்மனியில் மேற்படிப்புக்கு செல்ல இருந்த அந்த இளம் பெண் சில ஆவணங்கள் தேவைப்பட்டதால் அதை வாங்க .பஞ்சாப்பில் உள்ள கல்லூரிக்கு சென்றிருந்தார். 

அப்போது அகன்ஷா, அமிர்தசரசில் உள்ள நண்பரின் அறையில் தங்கிவிட்டு  மறுநாள் 17-ந் தேதி அங்கிருந்து  நண்பருடன் கல்லூரிக்கு அவர்  திடீரென்று கல்லூரியில் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அகன்ஷாவின் தந்தை ஜலந்தர் போலீசாரிடம் வலியுறுத்தினார். அதை ஏற்ற ஜலந்தர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

காதல் விவகாரத்தில் அகன்ஷா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதாவது கல்லூரியில் படிக்கும் போது திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள பிஜில் மேத்யூ என்ற பேராசிரியருடன் அகன்ஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டு  அவரை காதலித்துள்ளார்.

இந்தநிலையில்  பிஜில் மேத்யூவின் வீட்டில் தங்கிய அகன்ஷா, அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால் அதற்கு பிஜில் மேத்யூ மறுப்பு தெரிவித்துவிட  2 பேருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டது.

அப்போது கோபம் அடைந்த அகன்ஷா கல்லூரியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த தற்கொலை தொடர்பாக பிஜில் மேத்யூ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Love affair Woman space engineer suicide The truth revealed in the investigation


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->