கடனாக வாங்கிய லாட்டரி சீட்டு ரூ.11 கோடி வெற்றி...! அமித் சேராவின் அதிசய கதை...!
lottery ticket bought loan won Rs 11 crore amazing story Amit Chera
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள கோட்புட்லி பகுதியைச் சேர்ந்தவர் அமித் சேரா. வாழ்வாதாரத்திற்காக தன் சிறிய வண்டியில் தினமும் காய்கறி விற்று வந்த ஏழ்மையான தொழிலாளி அவர். ஆனால், கடந்த வாரம் நடந்த ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையை முழுமையாக மாற்றி அமைத்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பஞ்சாப் அரசு சார்பில் ரூ.11 கோடி மதிப்புள்ள பம்பர் லாட்டரி அறிவிக்கப்பட்டது. அதைப் பற்றி அறிந்த அமித் சேராவுக்கு, அதிர்ஷ்டத்தைச் சோதிக்க விருப்பம் இருந்தாலும், கையில் பணம் இல்லை. அதனால் தனது நண்பர் முகேஷிடம் உதவி கேட்டார். முகேஷ் தயங்காமல் பணம் கொடுத்து, லாட்டரி சீட்டை வாங்க உதவினார்.
அமித் சேரா பத்திண்டா பகுதியில் உள்ள கடையில் ஒரு சீட்டு வாங்கி சொந்த ஊருக்குத் திரும்பினார். சில நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 31-ம் தேதி நடந்த குலுக்கலில் அதிர்ஷ்டம் அவர்மேல் சிரித்தது,அவர் வாங்கிய சீட்டே ரூ.11 கோடி பரிசு வென்றது.அதிர்ச்சியுடனும், ஆனந்தத்துடனும் குதித்த அமித் சேரா, “இது எனக்கு கடவுளின் அற்புத ஆசீர்வாதம்.
என் இரண்டு குழந்தைகளின் கல்விக்காகவும், குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும் இந்த பணத்தை பயன்படுத்துவேன். எனக்கு உதவிய நண்பர் முகேஷுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரூ.1 கோடி அளிக்கிறேன்,” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
English Summary
lottery ticket bought loan won Rs 11 crore amazing story Amit Chera