லாக்கர் வைத்திருப்போர் கவனிக்கவும்! -புதிய விதிகள் நவம்பர் 1 முதல் அமல்...! - Seithipunal
Seithipunal


வங்கிக் கணக்குகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது நிதி அமைச்சகம்.
இனி, வங்கிக் கணக்கில் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனை இல்லையெனில், அந்த கணக்கில் உள்ள பணம் ரிசர்வ் வங்கியின் “டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி (DEAF)” எனப்படும் சிறப்பு நிதிக்கு தானாகவே மாற்றப்படும்.

இந்த நிதி மூலம், ரிசர்வ் வங்கி மக்களுக்கான நிதி கல்வி மற்றும் விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தகவலின்படி, பொதுத்துறை வங்கிகளில் ரூ.58,330 கோடியும், தனியார் வங்கிகளில் ரூ.8,673 கோடியும் உரிமையில்லாமல் முடங்கி கிடக்கின்றன.


இதற்கு முக்கிய காரணமாக, கணக்குதாரர் மரணமடைந்ததும், அவரின் வாரிசுதாரர் (நாமினி) உரிமை கோராமை குறிப்பிடப்படுகிறது.
புதிய விதிகள் நவம்பர் 1 முதல் அமல்
வங்கி கணக்கு திறப்பவர்கள் அல்லது லாக்கர் வசதி பயன்படுத்துபவர்கள், இதுவரை ஒருவரை மட்டுமே வாரிசுதாரராக நியமிக்க முடிந்தது.
ஆனால், நவம்பர் 1 முதல், புதிய விதிமுறைப்படி, அதிகபட்சம் 4 பேரை வாரிசுதாரர்களாக நியமிக்கலாம்.

அதோடு, ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சதவீத தொகை அல்லது உடைமை வழங்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவாக குறிப்பிட முடியும்.
நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்ததாவது,"புதிய விதிகள் அமலுக்கு வந்தால், கணக்குதாரர் அல்லது லாக்கர் பயனாளி மரணமடைந்த பிறகும், பணம் மற்றும் நகைகள் யாருக்கு செல்லவேண்டும் என்பதில் தெளிவு கிடைக்கும்.

இதனால், உரிமை கோரப்படாமல் முடங்கும் தொகை மற்றும் நகைகள் கணிசமாக குறையும்".எனவே, வங்கிகளுக்கு புதிய விதிகளை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Locker owners pay attention New rules come into effect from November 1st


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->