உள்துறை அமைச்சகம் வெளியிட்ட பட்டியல்....! தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை...?
list released by Ministry Home Affairs which placesTN will there be a war security drill
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன்காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சகம், நாடு முழுவதும் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,போர்க்காலங்களின்போது இந்திய எல்லைப் பகுதிகளில் அந்நிய நாடுகளின் போர் விமானங்கள் நுழைந்தால் சைரன் ஒலி எழுப்பப்படுவது வழக்கம்.இதில், நாளை நடைபெறவுள்ள ஒத்திகையின்போது, இதுபோல சைரன் ஒலியை எழுப்ப வேண்டும்.இதில், பாதுகாப்பான இடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும், சைரன் ஒலியின்போது அந்த இடங்களுக்கு மக்கள் பாதுகாப்பாக செல்வது குறித்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.இதில்,நாளை நடைபெறவுள்ள இந்த போர் ஒத்திகை எங்கெல்லாம் நடைபெறும் என்பது குறித்த விவரங்களை மத்திய உள்துறை அமைசகம் வெளியிட்டுள்ளது. அவ்வகையில், நாடு முழுவதும் 259 இடங்களில் இந்த ஒத்திகை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், தமிழகத்தில் சென்னை இடம் பெற்றுள்ளது.மேலும், ஐதரபாத், விசாகப்பட்டினம், பெங்களூரூ (நகர்புறம்), கொச்சின், திருவனந்தபுரம், பாண்டிசேரி உள்ளிட்ட இடங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த போர் ஒத்திகை நடைபெறவுள்ளது.
சென்னை:
குறிப்பாக சென்னையில் கல்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் இந்த போர் ஒத்திகை நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
list released by Ministry Home Affairs which placesTN will there be a war security drill