கோவில் பிராசாதத்தில் இறந்த பாம்பு; பக்தர்கள் அதிர்ச்சி.. - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் மலைக்கோவில் என்றழைக்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 

இந்தநிலையில், சந்திரசூடேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு தரப்பட்ட புளியோதரையில் இறந்த நிலையில் பாம்பு குட்டி இருந்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரசாதத்தில் இறந்த நிலையில் பாம்பு இருந்தது குறித்து பிரசாதம் வழங்கியவரிடம் கேட்ட போது அவர் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பக்தர்கள் சார்பில் அறநிலையத்துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

800 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தில் பாம்பு இறந்த கிடந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dead snake in the temple offering Devotees are shocked


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->