திருவள்ளூருக்கு புதிய பேருந்து வழித்தடம்...MLA ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்!
New bus route to Tiruvallur MLA Rajendran inaugurates
கடம்பத்தூர் ஒன்றியம் தண்டலம் ஊராட்சியிலிருந்து திருவள்ளூருக்கு புதிய பேருந்து வழித்தடம் ஒன்றை எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம் தண்டலம் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த ஊராட்சியில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மணவாள நகர், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மேல்நல்லாத்தூர் பகுதிக்கு வந்து அங்கிருந்து தான் பேருந்து மூலம் செல்ல வேண்டி இருந்தது. இதனால் காலை மாலை நேரத்தில் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரனிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து வழித்தடத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.மாவட்ட அவைத்தலைவர் கே.திராவிட பக்தன் தலைமை தாங்கினார். கடம்பத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கே.அரி கிருஷ்ணன் வரவேற்றார். ஒன்றிய அவைத்தலைவர் வி.ராஜசேகர் முன்னிலை வகித்தார்.
இதில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் கலந்து கொண்டு புதிய பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்தார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. இதில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். பொதுமக்கள் இந்த பேருந்து சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் கேட்டுக்கொண்டார்.
இதில் நிர்வாகிகள் பி. கே.நாகராஜ், வி.எஸ்.நேதாஜி, கொப்பூர் டி. திலீப்குமார், ஆர்.மோகனசுந்தரம், கே.ஏ. மதியழகன், எம். சேகர், ஏ. பெருமாள், பி.அர்.பிரபாகர், ஜார்ஜ், சேகர், பகவதிராஜா, தாமோதரன், ரமேஷ், சுதாகர், எஸ்.எல்லப்பன் பி.வி. முருகன் மற்றும் கிராம முக்கிய செல்கள் பொதுமக்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.
English Summary
New bus route to Tiruvallur MLA Rajendran inaugurates