ஆன்லைனில் மது விற்பனை..! உற்சாக அறிவிப்பால், படுகுஷியில் மதுபிரியர்கள்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என தமிழக அமைச்சர் நேற்று அறிவித்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்க ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தற்போது சுமார் 2544 உள்நாட்டு மதுபான கடைகளும் 1061 வெளிநாட்டு மதுபான கடைகளும் மத்திய பிரதேச மாநிலத்தில் இயங்கி வருகிறது. 

படிப்படியாக தமிழகத்தில் மது விற்பனை குறையும் என்று தமிழக அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் மது விற்பனையை அதிகரிக்க ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பானது தற்போது வெளியாகி இருக்கின்றது. 

மத்திய பிரதேச மாநிலத்தில் வெளிநாட்டு மதுபானங்கள் மட்டும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என்றும் வியாபாரத்தின் மீதான ஒரு கட்டுப்பாட்டை உருவாக்குவதற்காக ஒவ்வொரு பாட்டிலும் பார்கோடு ஒட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலத்தில் இதுபோன்ற ஆன்லைன் விற்பனை மூலம் வருவாய் ஈட்ட அந்த மாநில அரசு முடிவெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்திருக்கும் அதேவேளையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்தில் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்காமல் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

liquor drinks sales online


கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
Seithipunal