#BigBreaking | தகுநீக்கம் ரத்து! மீண்டும் எம்பி பதவியை வழங்கிய மக்களவை சபாநாயகர்! - Seithipunal
Seithipunal


லட்சத்தீவு எம்பி பைசல் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ரத்து செய்யப்பட்டு மீண்டும் அவருக்கு எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளது.

லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினரான முகமது பைசல் கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு,10 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மக்களவை உறுப்பினர் பதவி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உடனடியாக அவர் கேரள உயர்நீதிமன்றத்தை மேல்முறையீடு செய்து தனது தரப்பு வாதங்களை முன்வைத்து உள்ளார்.

இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை மற்றும் குற்றவாளி என்ற அறிவிக்கப்பட்டதையும் தடை செய்து உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, தனது மக்களவை உறுப்பினர் பதவியை திரும்ப தர வேண்டும் என்று முகமது பைசல் மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதினார். 

மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சபாநாயகருக்கு கடிதம் எழுதிய நிலையில், தற்போது அவருடைய மக்களவைத் பதவி திருப்பி மறுபடியும் அவருக்கே வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

latchatheevu MP disqualification cancel


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->