தெலுங்கானாவில் பரபரப்பு.! வீடு புகுந்து பெற்றோரை தாக்கிவிட்டு, பெண் மருத்துவர் கடத்தல்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் வீடு புகுந்து பெற்றோரை தாக்கிவிட்டு இளம் பெண் மருத்துவர் கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள துர்கயாம்ஜல் அடிபட்லா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் மருத்துவர் வைஷாலி (24). இந்நிலையில், இவரது வீட்டுக்குள் புகுந்த 50க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல், வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கி விட்டு மருத்துவர் வைஷாலியை காரில் கடத்தி சென்றுள்ளனர்.

மேலும் அவர்களை தடுக்க முயன்ற பெற்றோரையும் கட்டையால் அடித்து விட்டு சென்றுள்ளனர். இதனால் வைஷாலியின் தந்தை பலத்த காயம் அடைந்துள்ளார். 

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ரச்சகொண்டா கூடுதல் காவல் ஆணையாளர் சுதீர் பாபு தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காதல் விவகாரத்தில் மருத்துவர் வைஷாலியை கடத்தியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து வைஷாலியின் தந்தை தொழிலதிபர் ஒருவர் மீது குற்றம் சாட்டிய நிலையில், வைஷாலி பெற்றோரைத் தொடர்பு கொண்டு நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kidnapped female doctor after breaking into house and attacking parents in Telangana


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->