காணாமல் போன மனைவி.. ஓராண்டுக்கு பின் வெளிவந்த பகிர் உண்மை.. போலீசாரே அதிர்ந்து போன சம்பவம்.!
Kerala Women murdered by Husband and police reveals the truth
கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த சஜீவ் என்பவருக்கு ரம்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் திடீரென காணாமல் போனதால் மனைவியை காணவில்லை என்று போலீசில் சஜீவ் புகார் கொடுத்தார்.

அக்கம் பக்கத்தில் இருந்த நபர்களிடம் மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்ததாகவும் அவரோடு ஓடிவிட்டதாகவும் கூறி இருந்தார். இதனை தொடர்ந்து, காணாமல் போன ரம்யாவை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு எந்த விதமான தடயமும் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து, ரம்யாவின் கணவர் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட அவரது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிப்பு செய்தனர். போலீசாரின் சந்தேகம் வலுத்த நேரத்தில் ரம்யாவின் கணவரை பிடித்து தீவிரமாக விசாரித்ததில் அவரே மனைவி ரம்யாவை கொலை செய்து வீட்டில் புதைத்த சம்பவம் தெரிய வந்துள்ளது.

அந்த வீட்டிலேயே அவர் இத்தனை மாதங்களாக வசித்து வந்ததும் தெரிய வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை நடப்பதற்கு முன்பாக இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மனைவியை கொன்று கணவர் வீட்டில் புதைத்து இருக்கின்றார்.
பின் ரம்யா புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் தோண்டி ஆதாரங்களை எடுத்தனர். இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
English Summary
Kerala Women murdered by Husband and police reveals the truth