சுக்குநூறாக உடைந்த கண்ணாடி.. 4 நிமிடத்தில் துடிதுடித்து பறிபோன உயிர்.. பதைபதைப்பு வீடியோ காட்சிகள்.!!
Kerala women died in bank with breaking glass police investigation
இந்தியாவின் கேரளா மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டம் பெரம்பாவூர் பகுதியை சார்ந்த பெண்மணி வீணா ஜிஜூ பால் (வயது 46). இவர் சம்பவத்தன்று தனது காரில் அங்குள்ள வங்கிக்கு சென்றுள்ளார்..
வங்கியில் செல்வதற்கு முன்னதாக காரை நிறுத்திவிட்டு, காரின் சாவியை எடுக்காமல் வங்கிக்குள் வந்துள்ளார். பின்னர் காரிலேயே காரின் சாவி இருப்பதை உணர்ந்த வீணா, கார் சாவியை எடுக்க வேகமாக சென்றுள்ளார்.
இதில் வங்கியில் உள்ள கண்ணாடி கதவை மறந்த நிலையில், கண்ணாடியில் வேகமாக மோதியுள்ளார். இதில் கண்ணாடி சுக்குநூறாக உடைந்த நிலையில், உடைந்த பாகங்கள் வீணாவின் உடலில் ஆங்காங்கே குத்தியுள்ளது.
சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்த பெண்மணியை கண்டு அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், அவரை மீட்டு இருக்கையில் அமர வைத்துள்ளனர். பின்னர் அவசர ஊர்திக்கும் தகவல் தெரிவித்த நிலையில், சுமார் 4 நிமிடத்திற்கு உள்ளாகவே பெண்மணி பரிதாபமாக பலியாகியுள்ளார்.
பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல் துறையினர் வீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Kerala women died in bank with breaking glass police investigation