சபரிமலைக்கு இருசக்கர வாகனத்தில் செல்வதற்கு தடை.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. 

இதனால், பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இவர்களின் பாதுகாப்பு கருதி சில கட்டுப்பாடுகளை கேரள அரசு அறிவித்துள்ளது. 
இந்நிலையில் கேரள மோட்டார் வாகனத்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

"சபரிமலைக்கு தரிசனம் செய்வதற்கு வரும் அய்யப்ப பக்தர்கள் பொது போக்குவரத்து, வாடகை மற்றும் சொந்த வாகனங்களை பயன்படுத்த வேண்டும். ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்களை பயன்படுத்தி சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ள கூடாது. 

அதேபோல் இருசக்கர வாகனத்திலும் பம்பைக்கு செல்லக்கூடாது. இதுபோன்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். தூக்கமின்மை அல்லது சோர்வுடன் பயணம் செய்வது ஆபத்தை விளைவிக்கும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala govt ban two whealer for sabarimalai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->