இந்திய நாகரிகம் பழமையானது மட்டுமல்ல; சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டது - ஆரிப் முகமதுகான்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்னிந்திய கல்வி சங்கம் சார்பில் கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற விருது வழங்கப்பட்டது. 

இந்த விருதை பெற்றுக் கொண்ட பின் பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது, "சங்கராச்சாரியார் மற்றும் ரிஷிகள் உள்ளிட்ட துறவிகளின் போதனைகளால் இந்தியா தற்போதும் உயிர்ப்புடன் நிலைத்துள்ளது. 

இந்திய நாகரிகம் பழமையானது மட்டுமல்ல, சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டது. அது தொடர்ச்சியாக உறுதி செய்யப்பட்டும் வருகிறது" என்று அவர் தெரிவித்தார். 

இதற்கிடையே, பல்கலைக்கழக நியமன விவகாரத்தில் கேரள அரசின் தலையீடு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆரிப் முகமதுகான் தெரிவித்துள்ளதாவது: "பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று சமீபத்தில் உச்சநீதிமன்றமே தெரிவித்து உள்ளது. 

அப்படியிருக்கும் போது இந்த பிரச்சினையில் கேரள அரசு எப்படி தலையிட முடியும்? தங்களால் முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். பல்கலைக்கழகம் பொது பட்டியலில் உள்ளது. 

பல்கலைக்கழகங்களின் மீதான தனி அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. அப்படியிருக்கும் போது மாநில அரசு எப்படி ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்க முடியும்? என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala governor aarip mukamathukan speach in mumbai


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->