50 க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் முகநூலில் பழகி பாலியல் பலாத்காரம்... காமுகனின் பேரதிர்ச்சி வாக்குமூலம்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டத்தில் அமைந்துள்ள மதுகிரி பகுதியை சார்ந்தவன் அபிஷேக் கவுடா (வயது 27). இவன் வசித்து வரும் பகுதியை சார்ந்த சிறுமியுடன், அபிஷேக் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளான். இதனையடுத்து சிறுமியை திருமணம் செய்வதாக கூறிய காமுகன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ காட்சிகளாகவும் இதனை பதிவு செய்து வைத்துள்ளான். 

பின்னர் சிறுமியிடம் இது குறித்த வீடியோ காட்சிகளை காண்பித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளான். மேலும், இவனது மிரட்டலுக்கு பயந்துபோன சிறுமி ரூ.20 இலட்சம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை பறிகொடுக்கவே, பெற்றோர்கள் வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை காணாது சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து உண்மை நிலை தெரியவந்துள்ளது. 

இதன்பின்னர் சிறுமியின் பெற்றோர்கள் உண்மையை அறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அபிஷேக் கவுடாவை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், அதிர்ச்சி உண்மை வெளிவந்துள்ளது.

இது குறித்து காமுகன் அபிஷேக் கவுடா அளித்த வாக்குமூலத்தில், முகநூல் மூலமாக பெண்களிடம் பேசி ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும், இது போல சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதும், இதனை அலைபேசியில் விடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்ததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Tamil online news Today News in Tamil    


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka girl sexual harassment police investigation


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal