கர்நாடகா: நாளை மறுநாள் முழு அடைப்பு போராட்டம்! கைகோர்த்து ஆதரவு தெரிவிக்கும் 2000 அமைப்புகள்!
Karnataka day after tomorrow complete shutdown protest
தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கும்படி சுப்ரீம் கோர்ட் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டதன் படி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இதனை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
நாளை மறுநாள் கர்நாடக மாநிலம் முழுவதும் கன்னட சங்கத்தின் கூட்டமைப்பு முழு அடைப்பு போராட்டத்திற்கு அனுப்பி விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு கன்னட சலுவளி கட்சியின் தலைவர் தலைமை தாங்குகிறார்.
இது குறித்த அவர் தெரிவித்திருப்பதாவது, 'வருகின்ற 29ஆம் தேதி நாங்கள் கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
போராட்டம் நடைபெறும் தினம் பெங்களூரில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடுவோம். முழு அடைப்பு வேண்டாம் என நாங்கள் தெரிவித்தோம். இருப்பினும் அதனை நடத்துபவர்கள் ஏற்கவில்லை.

கர்நாடகா என்பது பெங்களூரு மட்டும் இல்லை. டெல்லியில் உள்ள பிரதமருக்கு எங்களின் குரல் கேட்க வேண்டும். இந்த போராட்டத்தில் 2000 அமைப்புகள் கலந்து கொள்ளும். திரைத்துறை ,உற்பத்தி துறை, உணவகம், போக்குவரத்து உட்பட அனைத்து துறையினரும் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பெங்களூரில் நேற்று அவ்வளவு அளவில் போலீசார் குவிக்கப்பட்டதை நான் பார்த்ததில்லை. நாளை மறுநாள் நடைபெற உள்ள போராட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு போராட்டம் நடத்துவார்கள்' என்றார்.
நாளை மறுநாள் போராட்டம் நடத்தப்படுவதால் பெங்களூரு பல்கலைக்கழகம் 58 வது ஆண்டு பட்டமளிப்பு விழாவை ஒத்தி வைத்துள்ளது.
நாளை மறுநாள் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு தமிழக கர்நாடகா எல்லை நுழைவுவாயில், ஓசூர் அருகே உள்ள நுழைவாயில், ஈரோடு தாளவாடி நுழைவு வாயில் போன்ற பகுதிகளில் தமிழக பேருந்துகள் மற்றும் கனரா வாகனங்கள் இயக்கப்படாது என தெரிகிறது.
இதனால் தமிழக எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் தமிழக போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Karnataka day after tomorrow complete shutdown protest