17 வயது மாணவனுடன் திருமணமான 28 வயது பெண் கள்ளக்காதல்.. உல்லாசத்திற்கு மறுத்ததால் அரங்கேறிய கொலை..! - Seithipunal
Seithipunal


17 வயது கல்லூரி மாணவருடன் கள்ளக்காதல் தொடர்பு வைத்திருந்த பெண்மணி, கல்லூரி மாணவனாலேயே கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், பனசங்கரி அருகே இருக்கும் யாரப் நகர் பகுதியை சார்ந்த பெண்மணி ஆஃப்ரின் கான் (வயது 28). இவரது கணவர் லாலு கான். இவர்கள் இருவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

ஆஃப்ரின் கான் வீட்டில் தையல் தைக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், லாலு கான் குரப்பன்பால்யா பகுதியில் செயல்பட்டு வரும் மரக்கடையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஆஃப்ரின் கானுக்கு அதே பகுதியில் வசித்து வந்த 17 வயது கல்லூரி மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது இவர்களுக்குள் பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை தினத்தில், வழக்கம்போல ஆஃப்ரின் கானின் கணவர் லாலு கான் பணிக்கு சென்றுள்ளார். 

வீட்டில் ஆஃப்ரின் கான் இருந்த நிலையில், அவரது கள்ளகாதலனான 17 வயது கல்லூரி மாணவன் ஆஃப்ரின் கானை பார்த்து உல்லாசமாக இருந்து வர சென்றுள்ளார். இதன்போது, இவர்கள் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 17 வயது கல்லூரி மாணவன், ஆஃப்ரின் கானை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். 

நிலைகுலைந்து விழுந்த ஆஃப்ரின் கான் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழக்கவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர் ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டோம் என்று எண்ணி, வீட்டில் இருந்த போர்வையை எடுத்து ஆஃப்ரின் கானின் உடலை போர்த்தி, தீவைத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 

வீட்டில் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவலை தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பனசங்கரி காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் தீயை அணைத்து, ஆஃப்ரின் கானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

முதலில் இது விபத்தாக இருக்கலாம் என காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கிய நிலையில், விசாரணையின் முடிவில் 17 வயது சிறுவன் சந்தேக வலையில் சிக்கி உண்மை அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, 17 வயது கல்லூரி மாணவனை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KARNATAKA BANGALORE Banashankari AREA 28 AGED WOMAN MURDER BY 17 AGED COLLEGE STUDENT AFFAIR ISSUE


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal