ஒரே குழியில் 8 சடலங்கள்.. அலட்சியமாக தூக்கி வீசும் பகீர் வீடியோ காட்சி.!! மாண்டுபோன மனிதம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. அங்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாக அதிகரித்து வருகிறது. அங்குள்ள பல்லாரி மாவட்டத்தில் நேற்று முன்தினத்தில், 12 பேர் அடுத்தடுத்து பலியாகினர். 

இந்த நிலையில், கொரோனா வைரஸின் தாக்கத்தால் உயிரிழந்த நபர்களின் சடலத்தை இழுத்து சென்று, குழிக்குள் உடலை வீசும் காட்சிகள் வெளியாகியுள்ளது. மேலும், மனிதாபிமானம் இல்லாது சுகாதாரத்துறையினர் செய்த செயல்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி இருக்கிறது.

கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களை அடக்கம் செய்ய மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில், நேற்று வெளியாகியுள்ள வீடியோ காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. 

இந்த விஷயம் தொடர்பான குற்றசாட்டை ஏற்க மறுத்த அம்மாவட்ட ஆட்சியர், பலியானவர்களின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முன் வராத காரணத்தால், ஒரேகுழியில் 8 பேரின் உடல் புதைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடக மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமாக இருக்கும் பல்லாரியிலேயே இது அரங்கேறியதுள்ளது தெரியவந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karnataka Ballari corona died patients body throw by workers


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->