கர்நாடகா : மைனர்களுக்கு வழங்கும் கடவுசீட்டு விதிகளில் திருத்தம் வேண்டும் - உயர்நீதிமன்றம் .! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வருகிறார். 

இதையடுத்து அந்த பெண், விவாகரத்து வேண்டி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அந்த பெண் மகனுடன் ஆஸ்திரேலியா நாட்டிற்குச் சுற்றுலா செல்ல முடிவு செய்து, தனது மகனுக்கு கடவுசீட்டுக்காக விண்ணப்பித்து இருந்தார். 

ஆனால், அந்த பெண்ணின் மகன் மைனர் என்பதால் பெற்றோர் இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டால் மட்டுமே கடவுசீட்டு வழங்கப்படும் என்று கூறி அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பெண், தனது மகனுக்கு கடவுசீட்டு வழங்க உத்தரவிடுமாறு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்நிலையில், அந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்பு வந்தபோது நீதிபதி தெரிவித்ததாவது, "மனுதாரரின் மகனுக்கு கடவுசீட்டு வழங்குவதற்கு பெற்றோர் இருவரும் கையெழுத்திட வேண்டும் என்பது தான் சட்டம். 

ஆனால், இதுபோன்று விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் தம்பதியின் பிள்ளைகளுக்கு கடவுசீட்டு வழங்குவதற்கு சட்ட சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே மைனர்களுக்கு கடவுசீட்டு வழங்குவது மற்றும் திருத்தம் செய்வது போன்ற விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டியது கட்டாயம்" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataga high court Emphasis to central govt for change rules in minor passport


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->