ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா பெருந்தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் பொருளாதார நெருக்கடி, வருவாயின்மை மற்றும் அன்றாட தேவைகளுக்கு கூட பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

அதன் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இந்த திட்டத்தின் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிடைக்கும் உணவு தானியத்துடன், ஒரு வீட்டுக்கு ஒரு மதத்திற்கு கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் கிடைக்கப் பெறும்.

கடந்த ஆண்டு நவம்பரில் அடுத்த நான்கு மாதங்களுக்கு இத் திட்டம் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 2022 மார்ச் மாதம் வரை இது அமலில் இருந்தது.

இந்நிலையில் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தினை அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kareep Kalyan yogana scheme extend 6 months


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->