அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் 4 நாட்கள் பொங்கல் விழா மற்றும் கார்னிவெல் திருவிழா  நடைபெற்று வருகிறது. நேற்று  மூன்றாவது நாளாக கால்நடைத்துறை சார்பில் குதிரை ரேக்ளா பந்தயம் வரிச்சகுடி பகுதியில் நடைபெற்றது. காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

காரைக்கால் மாவட்டம் வரிச்சூகுடியில் தொடங்கிய ரேக்ளா பந்தயம் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இந்த ரேக்ளா பந்தயத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த குதிரைகள் கலந்து கொண்டன. இதேபோன்று காளைகளுக்கும் போட்டியும் நடைபெற்றது. சீறிப்பாய்ந்த குதிரைகளையும் காளைகளையும சாலையில் இருபுறமும் பொதுமக்கள் கூடியிருந்து பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

இரு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் அமைச்சர் சந்திர பிரியங்காவின் குதிரை முதலிடம் பிடித்தது. காளைமாடுகள் ரேக்ளா போட்டியில் காரைக்கால் பூவம் பகுதி சேர்ந்த மாடு வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று நடைபெறும் கார்னிவல் திருவிழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karaikal district collector announced holiday for all schools


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->