ஒத்த மீன் 450000 ரூபாய்., கத்தாழை - போட்டி போட்டுக்கொண்டு குவிந்த வியாபாரிகள்.!
kakkinada kaththazhai fish
ஆந்திர மாநிலத்தில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய 30 கிலோ அரிய வகை மீன், 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் சென்றது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கத்தாழை மீன் என்று அழைக்கப்படும் அந்த 30 கிலோ எடையுள்ள அந்த மீன் ஆந்திர மாநிலத்தில் 4லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் சென்றுள்ளது.

ஆந்திர மாநிலம், காக்கிநாடா பகுதி மீனவர் ஒருவரின் வலையில், 30 கிலோ எடையுள்ள அரிய வகை கத்தாழை மீன் ஒன்று சிக்கியுள்ளது.

இந்த கத்தாழை மீன் மருத்துவ குணம் மிகுந்தது என்பதால், மீன் வியாபாரிகள் இந்த மீனை விலைக்கு எடுக்க போட்டி போட்டுக்கொண்டு குவிந்தனர்.
அந்த மீன் 10 ஆயிரத்தில் தொடங்கி லட்சக்கணக்கில் ஏலம் சென்றது. இறுதியில் மீன் வியாபாரி ஒருவர் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அந்த கத்தாழை மீனை ஏலத்தில் எடுத்தார்.

இந்த வகை மீனின் அடிவயிற்றில் உள்ள 'நெட்டி' என்று அழைக்கப்படும் காற்றுப்பை மூலம் ஒயின் மற்றும் மருந்து தயாரிப்பதற்கு மூலப் பொருளாக பயன்படுத்தப் படுவதால், இதனை வெளிநாடுகளுக்கு அதிக விலைக்கு ஏற்றுமதி செய்ய செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.
English Summary
kakkinada kaththazhai fish