சிகிச்சைக்காக புறப்பட்ட பயணம் சோகமாக முடிந்தது...! - நடுவானில் மரணம் - Seithipunal
Seithipunal


வங்காளதேச தலைநகர் டாக்காவைச் சேர்ந்த அக்லிமா அக்தர் (32) என்ற இளம் பெண், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக சென்னை வந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று தனியார் விமானம் மூலம் அவர் சென்னைக்குப் பயணித்தார்.

டாக்காவிலிருந்து சென்னை நோக்கி விமானம் பறந்து கொண்டிருந்தபோது, நடுவானில் அக்லிமா அக்தருக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைக் கவனித்த விமான பணிப்பெண்கள் உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவித்தனர்.

நிலமையின் தீவிரத்தை உணர்ந்த விமானி, உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, பயணிக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதால் மருத்துவக் குழுவை தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியதும், மருத்துவக் குழுவினர் உடனடியாக விமானத்துக்குள் சென்று அக்லிமா அக்தரை பரிசோதனை செய்தனர். ஆனால், விமான இருக்கையில் சாய்ந்த நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

மாரடைப்பே அவரது மரணத்துக்குக் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சென்னை விமான நிலையத்துக்கு விரைந்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

journey undertaken treatment ended tragically Death mid air


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->