துப்பாக்கிச்சூட்டில் முடிந்த பயணம்...! பாடல் வரிகளைப் போலவே அமைந்த பாடகர் அங்கித் பால்யன் மரணம்...!
journey that ended gunshot Singer Ankit Balyan who looked like song lyricist dies
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் பிரபல ஹரியான்வி பாடகரும், யூடியூப் படைப்பாளருமான அங்கித் பால்யன் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் ஏற்கனவே பாடியிருந்த ஒரு பாடலின் வரிகளைப் போலவே அவரது மரணமும் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுவது, இந்த சம்பவத்தின் அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது.
ஷாம்லி மாவட்டத்தில் உள்ள சி.பி. குப்தா காலனி பகுதியில் நேற்று, ஆகஸ்டு 26-ஆம் தேதி, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்றுவிட்டு அங்கித் பால்யன் வெளியே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை குறிவைத்து திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக தெரிவிக்கப்படுகிறது.துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அங்கித் பால்யனை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.அங்கித் பால்யன் பாடகராக மட்டுமின்றி நடிகராகவும், யூடியூப் படைப்பாளராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்துள்ளார். அவரது இணையப் பக்கத்தில் லட்சக்கணக்கானோர் அவரை பின்தொடர்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அவரது திடீர் மரணச் செய்தி ஹரியான்வி இசை உலகினரையும், சமூக வலைதள ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நண்பர்கள், சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்த சம்பவத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. அங்கித் பால்யன் ஏற்கனவே பாடியிருந்த ஒரு பாடலில் இடம்பெற்றிருந்த வரிகளைப் போன்றே அவரது மரணமும் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், அவரது பழைய பாடல் வரிகளை ரசிகர்கள் மீண்டும் பகிர்ந்து வருகின்றனர். பாடல் வரிகளுக்கும் அவரது மரணத்துக்கும் இடையே இருப்பதாக கூறப்படும் இந்த ஒற்றுமை, ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.அங்கித் பால்யன் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவலர்கள், துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்களை பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை காவலர்கள் சேகரித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் என்ன, கொலையில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
journey that ended gunshot Singer Ankit Balyan who looked like song lyricist dies