மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - எந்த மாவட்டத்தில் தெரியுமா? - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 21-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;- "தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் மாதந்தோறும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும், ஆண்டிற்கு இரண்டு பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனங்களின் அமைச்சர் அவர்கள் தலைமையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.09.2024 சனிக்கிழமை அன்று பச்சையப்பன் ஆடவர் கல்லூரி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் ASHOK LEYLAND, HYUNDAI, SUTHERLAND, FLEXTRONICS, TVS & MOTHERSON உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். அதேசமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ. 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். 

ஆகவே, 18 முதல் 35 வயது வரை உள்ள வேலை நாடுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 21.09.2024 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரிக்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 044-27237124, 044-27238894 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job camp in kanchipuram district


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->