வைஷ்ணவி தேவி கோவிலுக்கு ஹெலிகாப்டர் சேவை தொடக்கம்! முழு விவரம் இதோ.! - Seithipunal
Seithipunal


காஷ்மீரில் உள்ள பிரபல மாதா வைஷ்ணவ தேவி கோவிலில் ஒரே நாளில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக கோவில் வாரியம் தனது ஹெலிகாப்டர் சேவையை தொடங்குகிறது. 

ஜம்முவில் இருந்து சஞ்சி சாத்வரை ஹெலிகாப்டர் இயக்கப்படும் அங்கிருந்து பேட்டரி கார் மூலம் கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லப்படும். 

சிறப்பு தரிசனம் முடிந்து அதே நாளில் திரும்ப விரும்பும் பக்தர்களுக்கு ரூ. 35 ஆயிரம் கட்டணமும் அடுத்த நாள் திரும்ப நினைக்கும் பக்தர்களுக்கு ரூ. 50000 கட்டணமும் வசூலிக்கப்படும். 

இந்நிலையில் மாதா வைஷ்ணவ தேவி கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்திருப்பதாவது, வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் ஜம்மு மற்றும் வைஷ்ணவ தேவி கோவில் இடையே நேரடி ஹெலிகாப்டர் சேவை தொடங்குகிறோம். 

ஒரு பகுதியாக பேட்டரி கார் சேவை, முன்னுரிமை தரிசனம் போன்ற வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். இந்த தொகுப்பை எங்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jammu vaishno devi temple helicopter service


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->