போலி பயனாளிகள் கணக்கில் களவாடியதால் தாமதமா...?பி.எம்.கிசான் நிதி வெளியீடு குறித்து புதிய தகவல்!
Is there a delay due to fake beneficiaries stealing accounts New information release of PM Kisan funds
பி.எம்.கிசான் சம்மான நிதி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் ரூ.6,000 நிதி உதவி மூன்று தவணைகளாக நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை திட்டத்தின் 20 தவணைகள் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளன.2025 ஆம் ஆண்டுக்கான 19வது தவணை பிப்ரவரியிலும், 20வது தவணை ஆகஸ்டிலும் பரிமாறப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 21வது தவணை தீபாவளிக்கு முன்பாகவே வரும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தாலும், அந்த தொகை இதுவரை வரவில்லை.

அதிகாரிகள் விளக்கத்தில் என்ன?
வேளாண்மைத் துறை உயரதிகாரிகள் கூறுகையில்:
தற்போது, நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் தனித்துவ விவசாயி அடையாள எண் (Unique Farmer ID) வழங்கும் பணி முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த அடையாள எண் பெற்றவர்களுக்கே இனி அரசின் அனைத்து மானியத் திட்டங்களும் கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.ஆனால் இன்னும் கணிசமான எண்ணிக்கையிலான விவசாயிகள் இந்த புதிய அடையாள எண்ணைப் பெறாமல் உள்ளனர். இவர்களுக்குப் 21வது தவணை கிடைக்குமா? என்ற கேள்விக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஏன் தாமதம்?
ஒரே நேரத்தில் நாடு முழுவதும்:
போலி பயனாளிகள்
இறந்த விவசாயிகள்
நிலம் மாற்றியவர்கள்
தவறான கணக்குகளில் பணம் பெற்றவர்கள்
இவர்களை கணக்கிலிருந்து நீக்கும் விரிவான சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த தரவு சுத்திகரிப்பு முடிவடைந்ததும், இந்த மாத இறுதி அல்லது டிசம்பர் தொடக்கத்தில் 21வது தவணை வெளியிடப்படும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு முக்கிய அறிவுரை
ஒவ்வொரு விவசாயியும்
அருகிலுள்ள இ-சேவை மையம்
அல்லது
தங்கள் வேளாண்மை உதவி அலுவலர்
மூலம் உடனடியாக Unique Farmer ID பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த பதிவு முற்றிலும் இலவசம். எதிர்காலத்தில் அரசு வழங்கும் அனைத்து பயன்களுக்கும் இந்த அடையாள எண் முக்கிய நுழைவுச்சீட்டாக மாறவுள்ளது.
English Summary
Is there a delay due to fake beneficiaries stealing accounts New information release of PM Kisan funds