துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா: நீதிபதி பதவி நீக்க தீர்மானத்தில் அரசு இடையே கருத்து வேறுபாடு காரணமா? - Seithipunal
Seithipunal


நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் சிக்கிய  பணமூட்டை விவகாரம் மீதான பதவி நீக்க தீர்மானம் குறித்த விஷயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜக்தீப் தன்கர் நேற்று தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதியிருந்தார். அதில்தனது உடல்நிலையை காரணமாக பதிவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டு இருந்தார். பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் அவர் ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அவர் உடல்நிலையை காரணம் சொல்லியிருந்தாலும் அதனை அரசியல் கட்சியினர் ஏற்கவில்லை. வேறு காரணங்களை கேட்டு அறிக்கை வெளியிடவும், பேட்டி கொடுக்கவும் தொடங்கியுள்ளனர்.

இதில், பணமூட்டை சர்ச்சையில் சிக்கிய உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் விவகாரம் காரணமாக ஜக்தீப் தன்கரும் பதவி விலக நேர்ந்ததாக தகவல்கள் கசிந்துள்ளன. இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளதாவது:

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும்,  இது தொடர்பாக டில்லியில் ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரை எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசியிருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். அப்போது தீர்மமானத்தை அளித்த நிலையில் அதனை அவரும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால், மத்திய அரசுக்கு இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பதால் துணை ஜனாதிபதிக்கும். அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே ஜக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is the governments disagreement over the judge removal the reason for Vice President resignation


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->