மவுனம் கலைப்பாரா மோடி? - மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி!
Is Modi going to break the silence? Question by Mallikarjun Kharge
இந்தியா குறித்து டிரம்ப் கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி மவுனமாக இருக்கப்போகிறாரா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-"போர்நிறுத்தம் தொடர்பான டொனால்ட் டிரம்ப்பின் கருத்துகள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மவுன விரதத்தை அனுசரித்தார். தற்போது மோடி தனது மவுனத்தை கலைத்து பேசுவாரா?
டிரம்ப் நம் மீது 25% வரி மற்றும் அபராதம் விதித்துள்ளது நாட்டின் வர்த்தகத்திற்கு தீங்கு விளைவிக்கும். சிறு, குறு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.
மந்திரிகள் பல மாதங்களாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி பேசி வருகின்றனர். அவர்களில் சிலர் பல நாட்கள் வாஷிங்டனில் முகாமிட்டு டிரம்ப் சர்க்கார்" உங்கள் நட்புக்காக நம் நாட்டிற்கு இப்படித்தான் வெகுமதி அளிப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வது,ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஆயுதங்களை வாங்குவது,பிரிக்ஸ்' அமைப்பில் இந்தியா உறுப்பினராக இருப்பது. அமெரிக்க டாலர் மீதான தாக்குதல் என்று கூறப்படும் 'பிரிக்ஸ்' அமைப்பின் நடவடிக்கை என அமெரிக்க ஜனாதிபதி இந்தியா மீதான வரி விதிப்புக்கான காரணத்தை இவ்வாறு கூறியுள்ளார்,
இந்தியாவில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும், நாட்டின் நலனுக்காக உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுடன் நட்பை வலுப்படுத்தியுள்ளன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின்போது, டாக்டர் மன்மோகன் சிங் அமெரிக்கா உட்பட 45 நாடுகளிடமிருந்து அணு ஆயுத விலக்கைப் பெற்றார். உங்கள் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை நமது தேசியக் கொள்கைக்கு கடுமையான அடியைக் கொடுத்துள்ளது. டிரம்ப் பாகிஸ்தானுடன் எண்ணெய் இருப்பு ஒப்பந்தம் செய்வது பற்றிப் பேசுகிறார். அவர் இந்தியாவை மிரட்டுகிறார். நீங்கள் அமைதியாக உட்கார்ந்திருக்கிறீர்களா? விளம்பரத்தைப் பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக, மோடி அரசு நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும்."இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary
Is Modi going to break the silence? Question by Mallikarjun Kharge