வரலாற்றில் இன்றைய நாளின் சிறப்பு... உலக எழுத்தறிவு தினம்...!!
international literacy day 2020
தேசிய கண் தான தினம்:
இந்தியாவில் தேசிய கண் தான தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் ஆகஸ்ட் 25ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் 8ஆம் தேதி முடிவடைகிறது. இக்காலக்கட்டத்தில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் இந்திய அரசு சார்பில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலக எழுத்தறிவு தினம்:
உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக செப்டம்பர் 8ஆம் தேதி உலக எழுத்தறிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
1965ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில்தான் உலக எழுத்தறிவு தினம் பிரகடனம் செய்யப்பட்டது.
தனி மனிதர்களுக்கும், பல்வேறு வகுப்பினருக்கும், சமுதாயங்களுக்கும் எழுத்தறிவு எவ்வளவு முதன்மையானது என்பதை எடுத்துரைப்பதே இந்நாளின் குறிக்கோள் ஆகும்.
English Summary
international literacy day 2020