அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம் - நடந்தது என்ன?
indigo flight emergency landing in tirupathi airport
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் இருந்து ஐதராபாத்திற்கு நேற்று இரவு 7.55 மணியளவில் இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
இந்த நிலையில், விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த விமானி விமானத்தை மீண்டும் திருப்பதியில் அவசர அவசரமாக தரையிறக்கினார். ஆனால், விமானம் திருப்பதி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்பு சுமார் 30 நிமிடங்களில் நடுவானில் வட்டமடித்துள்ளது.

விமானியின் தீவிர முயற்சியால் விமானம் தரையிறக்கப்பட்டு அதில் இருந்த பயணிகள் அனைவரும் விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
English Summary
indigo flight emergency landing in tirupathi airport