ஐதராபாத் விமான நிலையத்திலிருந்து தினமும் 150க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி இண்டிகோ சாதனை.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள பல சர்வதேச விமான நிலையங்களில் இருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும், உலகின் பல நாடுகளுக்கும் இயக்கப்படும் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்று இன்டிகோ விமான நிறுவனம். தினமும் பல நாடுகளுக்கு இந்த விமானம் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், இண்டிகோ நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் சஞ்சீவ் ராம்தாஸ் மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் நநடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் பேசியதாவது:-

"இண்டிகோ நிறுவனம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் இருந்து தினமும் 150க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வருகிறது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்" என்றுத் தெரிவித்துள்ளார்.

தற்போது, இன்டிகோ விமான நிறுவனம் ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டில் நாற்பத்தொன்பது நகரங்களுக்கும், வெளிநாடுகளில் எட்டு நகரங்களுக்கும் விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

indigo company operate one hundrad and fifty flights daily from hydrabad


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->