நாட்டிலேயே முதல் "விர்ச்சுவல்" பள்ளி டெல்லியில் தொடக்கம் - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்..! - Seithipunal
Seithipunal


புதுடில்லி அரசு மாணவர்கள் பள்ளிக்கு நேரடியாக போகாமலேயே, 'ஆன்லைன்' மூலமாக படிக்கும், 'விர்ச்சுவல்' பள்ளியை துவக்கியுள்ளது. இந்த "விர்ச்சுவல்" பள்ளியில் ,  நாட்டின் எந்தப் பகுதியில் இருப்பவர்களும் சேர்ந்துக் கொள்ளலாம் .

புதுடில்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. முதல்வர் கெஜ்ரிவால் டெல்லியில் பள்ளிகளுக்கு செல்லாமலேயே, விர்ச்சுவல் முறையில் படிக்கும் பள்ளியை நேற்று துவக்கி வைத்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, கொரோனா தொற்று பரவல் காலத்தில், ஆன்லைன் மூலமாக  மாணவர்கள் படித்து வந்தனர். அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த பள்ளி துவக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள், இந்த விர்ச்சுவல் பள்ளியில் சேரலாம்.நாட்டின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவரும் இதில் படிக்க முடியும்.

இந்த விர்ச்சுவல் பள்ளியில், 9 ஆம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை நடத்தப்படும். நாட்டிலேயே முதல் விர்ச்சுவல் பள்ளியை துவக்கியுள்ளோம். இந்த பள்ளிக்கு மாநில கல்வி வாரியத்தின் மூலமாக தேர்வுகள் நடத்தப்படும். இதில் சேரும் மாணவர்களுக்கு, 'நீட், க்யூட், ஜே.இ.இ.,' உள்ளிட்ட உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியும் அளிக்கப்படும் என்று முதலவர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India's first "virtual" school started in Delhi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->