கடலுக்கு அடியில் செல்ல போகும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில்! - Seithipunal
Seithipunal


தானே கழிமுக பகுதியில் 7 கி.மீ தூரத்திற்கு கடல் வழி சுரங்கப்பாதை!

மத்திய அரசு குஜராத் மாநிலம் அகமதாபாத் முதல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை புல்லட் ரயில் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தல் பணியானது முந்தைய சிவசேனா அரசால் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. 

இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்றத்து முதல் இத்திட்டத்திற்கான அனைத்து பணிகளும் வேகம் எடுத்துள்ளது. முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்துதல் பணியானது முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த சுரங்க ரயில் பாதை ஆனது மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் ரயில் நிலையத்திலிருந்து தானே மாவட்டம் ஷில்பாடா ரயில் நிலையத்திற்கும் இடையே 21 கி.மீ சுரங்க ரயில் பாதை அமைய உள்ளது. தானே கழிமுகப்பகுதியில் 7 கி.மீ தூரம் கடலுக்கு அடியில் அமைய உள்ளது. இந்தியாவின் முதலாவது கடலுக்கு அடியில் ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்படுவது இதுவே ஆகும். 

இந்தப் பணி மேற்கொள்வதற்கான புதிய டெண்டரை தேசிய அதிவேக ரயில் கழகம் அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indias first bullet train to go under the sea


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->