இந்தியர்களை விடுவிக்க வேண்டும்.. ரஷியாவிடம் இந்தியா வலியுறுத்தல்!  - Seithipunal
Seithipunal


இந்தியர்களை விடுவிக்குமாறு மத்திய அரசு மீண்டும் ரஷியாவை கேட்டுக்கொண்டு உள்ளது.மேலும்  'ரஷியாவில் உயிரிழந்த கேரள மாநிலத்தவரின் உடலை விரைவில் இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளோம் என்று வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிராக ரஷிய போரிட்டு வரும்நிலையில் ரஷிய ராணுவத்தில் இந்தியர்களும் இணைந்து போரிட்டு வருவரது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒரு சிலர் கொல்லப்பட்டு இருந்தனர் என தகவல் தெரிவிக்கப்பட்டது . மேலும்  ரஷிய ராணுவத்தில் பணியாற்றி வந்த இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என ரஷியாவிடம் இந்தியா கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் 40-க்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். எனினும் இதில் சுமார் 20 பேர் வரை அங்கே இன்னும் இருக்கலாம் என மத்திய அரசு தெரிவித்து இருந்ததையடுத்து அவர்களையும் மீட்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் கேரளாவை சேர்ந்த எலெக்ட்ரீஷியன் ஒருவர் உக்ரைனுடனான போரில் கொல்லப்பட்டு உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தியர்களை விடுவிக்குமாறு மத்திய அரசு மீண்டும் ரஷியாவை கேட்டுக்கொண்டு உள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ரஷியாவில் உயிரிழந்த கேரள மாநிலத்தவரின் உடலை விரைவில் இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளோம் என்றும்  இந்த விவகாரத்தை ரஷியாவுடன் தீவிரமாக எடுத்துக்கூறியதுடன், மீதமுள்ள இந்தியர்களையும் உடனடியாக திருப்பி அனுப்ப வலியுறுத்தி உள்ளோம்' என அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

 Indians should be freed. India urges Russia 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->