ஒடிசா ரயில் விபத்து எதிரொலி.. 58 ரயில்கள் ரத்து என இந்திய ரயில்வே அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


ஒரிசா மாநிலம் பஹாகானா ரயில் நிலையத்தில் நேற்று மாலை 6:50 மணி அளவில் ஹௌராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூர் ஹவுரா இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒன்றின் மீது போன்ற மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் தற்போது வரை 288 பேர் உயிரிழந்ததாக ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ரயில் விபத்து காரணமாக ஏற்கனவே 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 58 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பாலசோர் ரயில் விபத்து குறித்து ரயில்வே அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் இதுவரை, மொத்தம் 58 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 81 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. 10 ரயில்கள் குறுகிய காலம் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் பாதைகள் சரி செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் சீரமைப்பு பணிகள் நிறைவடையும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Railways announced 58 trains cancelled


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->