ஆமதாபாத்தில் விமான விபத்தின் முதற்கட்ட அறிக்கை: வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை இல்லை: இந்திய விமானிகள் சங்கம் நிராகரிப்பு..!
Indian Pilots Association rejects Ahmedabad plane crash preliminary report as lacking transparency and credibility
குஜராத் ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக ஏஏஐபி புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி, முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையை நிராகரிக்கிறோம் என இந்திய விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், விமானிகளின் கடைசி நேர கலந்துரையாடல் பற்றியும், அவர்களின் பேசியதில் இடம்பெற்ற விஷயங்கள் என்ன என்பது பற்றியும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே 02 இன்ஜின்களும் செயலிழந்துள்ளதாகவும், ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு தான் அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதில் அளித்துள்ளார். உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த அறிக்கை தொடர்பாக இந்தியா விமானிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டு கூறியுள்ளதாவது: விசாரணை நடக்கும் தொனியும், திசையும், விமானிகள் மீது தான் தவறு என்ற ஒரு தலைபட்சமாக செல்கிறது என்றும், இந்த அனுமானத்தை நாங்கள் நிராகரிக்கிறோம் எனவும், உண்மையான ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்துவதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பொறுப்பான அதிகாரி கையெழுத்து அல்லது ஒப்புதல் இல்லாமல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விசாரணை ரகசியமாக நடைபெறுவதால், அதில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும், அதன் நம்பகத்தன்மை மற்றும் பொது மக்களின் நம்பிக்கையை குறைக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அனுபவம் வாய்ந்த விமானிகள் இன்னும் விசாரணைக்குழுவில் சேர்க்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Indian Pilots Association rejects Ahmedabad plane crash preliminary report as lacking transparency and credibility