ஹோட்டல் தொழிலில் கோலி முதல் ஷேவாக் வரை! இந்திய முன்னாள், இந்நாள் வீரர்களின் தொழில் பட்டியல் இதோ! - Seithipunal
Seithipunal


பல முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்கள், தங்களின் விளையாட்டு வருவாயை உணவகத் தொழிலில் முதலீடு செய்து புதிய அடையாளங்களை உருவாக்கியுள்ளனர். அதுகுறித்த பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விராட் கோலி, 2017-ல் தில்லி ஆர்.கே.புரத்தில் 'ஒன் 8 கம்யூன்' என்ற சைவ உணவகத்தைத் தொடங்கி, பின்னர் ஹைதராபாத் மற்றும் குருகிராமிலும் கிளைகள் ஏற்படுத்தியுள்ளார். மேலும் ‘நியூவா’ என்ற ஹோட்டலைக் கூட்டுத்தொடர்பாக நடத்துகிறார்.

ரவீந்தர ஜடேஜா தனது சொந்த ஊரான ராஜ்காடில் ‘ஜட்டுஸ் ஃபுட் ஃபல்ட்’ உணவகத்தை நடத்தி வருகிறார்.

ஜாகிர் கான், புணேவில் ‘டைன்ஃபைன்’, ‘டான் ஸ்போர்ட்ஸ் லவுஞ்ச்’ ஆகிய இரண்டு ஹோட்டல்களை 2005-ல் தொடங்கினார்.

முகமது சிராஜ், ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் சாலை 3-ல் 'ஜோஹர் பானா' என்ற உணவகத்தைத் தொடங்கவுள்ளார். இங்கு மொகலாயி, பாரசீக, அரேபிய, சீன உணவுகள் படைக்கப்படுகின்றன.

சச்சின் டெண்டுல்கர் ‘சச்சின்ஸ்’ என்ற பெயரில் உணவகங்களைத் தொடங்கினார், ஆனால் தற்போது அவை இயங்கவில்லை.

கபில்தேவ், 2008-ல் ‘இலெவன்’ என்ற உணவகத்தைத் திறந்தார். இந்திய மற்றும் காண்டினென்டல் உணவுகள் இதில் இடம்பெறுகின்றன.

வீரேந்திர ஷேவாக், தில்லியில் ‘ஷேவாக்ஸ் பேவரெட்ஸ்’ என்ற உணவகத்தைத் திறந்தாலும், சில மாதங்களிலேயே மூடிவிட்டார்.

அஜய் ஜடேஜா, லால் பகதூர் சாஸ்திரியின் பேரனுடன் இணைந்து ‘சென்சோ’ என்ற இத்தாலிய உணவகத்தைத் தொடங்கினார். ஆனால் அது நீண்ட காலம் இயங்கவில்லை.

சுரேஷ் ரெய்னா, ஆம்ஸ்டர்டாமில் இந்திய உணவகத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

ஷிகர் தவான், துபை ஜுமேராவில் *‘ஃப்ளையிங் கேட்ச் ஸ்போர்ட்ஸ் கபே’*யைத் திறந்துள்ளார்.

அம்பதி ராயுடு, மூன்று மாடிகளைக் கொண்ட ‘பாராக்ஸ் & ஆண்டிரூம்’ உணவகத்தை ஆரம்பித்துள்ளார்.

சௌரவ் கங்குலி, 2004-ல் கொல்கத்தாவில் ‘சவுரவ்ஸ்: திபுட் பெவிலியன்’ என்ற உணவகத்தைத் தொடங்கி, 2011-ல் மூடினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian cricket players hotel details


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->