மாயமான இராணுவ வீரரின் உடை.. அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி தெற்கு காஷ்மீரில், ஷோபியான் மாவட்டம் ரெஷிபோரா கிராமத்தைச் சேர்ந்த இந்திய இராணுவ வீரர் ஷாகிர் மன்சூர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார். எரிக்கப்பட்ட நிலையில் அவரது கார் அதே நேரத்தில் குல்காம் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை ஷோபியானில் ஒரு இராணுவ வீரரின் உடைகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், காணாமல் போன வீரருடைய உடைகள் அவருடைய வீட்டில் இருந்து 3 கி.மீ தொலைவில் இருக்கும் மற்றொரு கிராமமான லாண்டூராவில் ஒரு பழத்தோட்டத்திற்கு அருகே வெவ்வேறு மூன்று இடங்களில் காணப்பட்டதாக சிலர் தெரிவித்தனர்.

இந்த துணிகள் ஷாகிருக்கு சொந்தமானவைதான் என்பதை காணாமல் போன வீரரின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அவர் கடத்தப்பட்ட நாளில் இந்த உடையை தான் அவர் அணிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு நடுவில், கடத்தப்பட்ட வீரரின் தந்தையான மன்சூர் அகமது, பயங்கரவாதிகளால் ஷாகிர் கொல்லப்பட்டிருந்தால், அவருடைய இறுதி சடங்கிற்காக பயங்கரவாதிகள் அவருடைய உடலை திருப்பி அளிக்க வேண்டும் என்றும், ஒருவேளை உயிருடன் இருந்தால், அவரை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian army missing officer dress


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->